• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா காளி வேடமிட்ட பக்தர்களுக்கு முறத்தால் ஆசீர்வாதம்..,

ByPrabhu Sekar

Mar 5, 2026

சென்னை, பல்லாவரம் அடுத்த பம்மல் பசும்பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாசி மாதத்தை முன்னிட்டு முன்றாம் ஆண்டு மாசிமாத தீமிதி திருவிழா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாக தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆலய தர்மகத்தா மகேந்திரன், மற்றும் துணை தலைவர்கள் அகிலன், ரகுராமன், செயலாளர் ஜெகன்மோகன், துணைச் செயலாளர் திவான்ராஜ், பொருளாளர் முத்துக்குமரன் உட்பட உபயதாரர்கள், பக்தர்கள்,ஊர் பொதுமக்கள், ஆன்மீக நண்பர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். வெகு சிறப்பாக நடைபெற்றது.

பிப்ரவரி 22ஆம் தேதி அன்று தொடங்கிய மாசி திருவிழாவானது மார்ச் 4-ஆம் தேதி வரை பதினோரு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

மாசி திருவிழாவில் 9-ஆம் நாள் மார்ச் 2-ஆம் தேதி காலை காளி வேடமிட்டு ஊர்வலமாக சென்று ஆசீர்வதித்து ஆலயம் வந்தடைந்து அங்கு முத்துமாரியம்மனாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை பம்மல் சூரியம்மன் கோவிலில் இருந்து தீமிதி பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, பம்பை, உடுக்கை, தாரை, தப்பட்டை, பேண்டு, வாத்தியம் முழங்க, ஊர்வலமாக புறப்பட்டு, பம்மல் பசும்பொன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் வந்தடைந்தனர். அங்கு ஆலய வளாக திடலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனர். அன்றிரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.