நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்தில் முரசொலி மாறனின் 92 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கௌதமன் தலைமையில் திமுகவினர் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதற்கு முன்னதாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலைக்கும் முத்துவேலர் அஞ்சுகம் அம்மையார் திருவுருவச் சிலைக்கும் நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கௌதமன் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.