• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

செவாலியர் விருதை தட்டி சென்ற எம்.பி. சசிதரூர்..

Byகாயத்ரி

Aug 12, 2022

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதை சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்பட பல இந்தியர்கள் பெற்றுள்ளார்கள். இந்த நிலையில் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்பியான சசிதரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது கிடைத்துள்ளது.

23 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் அவையில் தூதராக பணியாற்றிய சசிதரூர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். தனக்கு செவாலியர் விருது கிடைத்தது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள சசிதரூர், பிரான்ஸ் உடனான உறவை போற்றும் நம் மொழியை நேசிக்கும் கலாச்சாரத்தை போற்றும் ஒருவனாக இவ்விருது எனக்கு வழங்கப்பட்டதற்கு எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சசிதரூர் ஏற்கனவே ஸ்பெயின் நாட்டின் உயரிய விருதை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.