• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாளை திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்

Byவிஷா

May 16, 2024

நாளை மே 17 அன்று திரையரங்குகள் மற்றும் ஓ.டி.டி.யில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் திரை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல திரைப்படங்கள் திரையரங்கிலும், ஓடிடி தளங்களிலும் வெளியாகி உற்சாகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மே 17ம் தேதி என்னென்ன தமிழ் திரைப்படங்கள் திரையரங்கிலும், ஓடிடியிலும் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம். வரும் மே 17ம் தேதி நான்கு தமிழ் திரைப்படங்களும் இரண்டு டப்பிங் படங்களும் வெளியாக உள்ளன.

இங்க நான் தான் கிங்கு :

ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் திரைப்படம் இங்க நான் தான் கிங்கு. அவரின் ஜோடியாக பிரியாலயா என்ற புதுமுகம் அறிமுகமாகியுள்ளார். 90ஸ் கிட்ஸாக இருக்கும் சந்தானம் திருமணத்துக்காக பெண் தேடி அலையும் போது என்னென்ன பிரச்சினையை சந்திக்கிறார் என்பதை நகைச்சுவை கலந்து படைத்துள்ளனர்.
எலக்சன் :

இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உறியடி படத்தின் மூலம் பிரபலமான ‘ விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எலக்சன்’. உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் மே 17ம் தேதி வெளியாக உள்ளது.
படிக்காத பக்கங்கள் :

செல்வன் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள இப்படத்தில் பிரஜின், ஜார்ஜ் மரியன், லொள்ளு சபா மனோகர், பாலாஜி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கன்னி :

மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் அஸ்வின் சந்திரசேகர், மணிமாறன், ராம் பரதன், தாரா க்ரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கன்னி’. இப்படம் மே 17ம் தேதி வெளியாக உள்ளது. இது தவிர தி கார்பீல்டு மூவி மற்றும் கர்டம் புக்டம் ஆகிய டப்பிங் திரைப்படங்களும் மே 17ம் தேதி வெளியாக உள்ளன. அதே போல மே 17ம் தேதி ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் மற்றும் வெப் சிரீஸ்கள் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம்.
ஹாட் ஸ்பாட் (தமிழ்) :

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கலையரசன் ஹரிகிருஷ்ணன், சாண்டி, ஜனனி ஐயர், அம்மு அபிராமி, சுபாஷ், சோபியா, கௌரி கிஷன், ஆதித்ய பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படம் மார்ச் 29ம் தேதி திராயணர்கில் வெளியானது. இப்படம் வரும் மே 17ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தலைமை செயலகம் (தமிழ்):

இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள வெப் சீரிஸ் தலைமை செயலகம். அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் 8 எபிசோட்களாக வெளியாக உள்ளன. கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், பரத் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் ஜீ 5 ஓடிடி தளத்தில் மே 17 வெளியாக உள்ளது.
தி பாய்ஸ் (தமிழ்) :

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஷிவா ஷரா, அர்ஷத், முPலு வினோத், யுவராஜ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்டோரின் நடிப்பில் மார்ச் 29ம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம் வரும் மே 17ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தி பாய்ஸ் (தமிழ்) :

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஷிவா ஷரா, அர்ஷத், முPலு வினோத், யுவராஜ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்டோரின் நடிப்பில் மார்ச் 29ம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம் வரும் மே 17ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.