மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தினசரி 125 மெட்ரிக் டன் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி முழுவதும் உள்ள கழிவு நீர் இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்படுவதால் சுமார் 300-க்கும் மேற்பட்ட மெட்ரிக் டன் கழிவு நீர்கள் இந்த வெள்ளைக்கல் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வருகிறது. இந்த நிலையில் 125 மெட்ரிக் டன் கழிவு நீர்கள் சுத்திகரிக்கப்பட உள்ளதால் மீதமுள்ள கழிவுநீர்களை அருகில் உள்ள கழிவு நீர் கிடங்கிற்கு பைப் மூலம் அனுப்பப்படுகிறது.

இந்த கழிவு நீர் செல்கிற பைப் சேதம் அடைந்து கழிவு நீர் கசிந்து சாலையைக் கடந்து எதிரில் உள்ள வயக்காட்டில் பாய்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைவதோடு விவசாய நிலத்திற்குள் கழிவுநீர் செல்வதால் விவசாயிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில் இரண்டு நாட்களாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். சாலையில் கழிவு நீர் ஓடுவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்ற அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.