கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாளியூர் பகுதியில் உள்ள ஜெயா நகரில், காம்பவுண்ட்டுக்குள் பழுது பார்க்க வைக்கப்பட்டு இருந்த நீர் மூழ்கி மோட்டாரும் பம்பும் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி ஒப்பந்ததாரர் மணியன் (56) புகார் அளித்ததை அடுத்து, தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வடவள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நரசிம்மா (19), ராஜதுரை (22), அருஞ்சோதிர்வேல் (22) ஆகியோர் மோட்டாரை திருடியதும், ரதினபாண்டி (44) என்பவர் திருடப்பட்ட பொருள்களை விற்றதும் தெரியவந்தது.
காவல் துறையினர் இந்த நான்கு பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 10 ஹெச்பி நீர்மூழ்கி மோட்டார் ஒன்று, 3 ஹெச்பி பம்ப் ஒன்று ஆகிய 60,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டன.