ஆண்டவர் தொடர்ந்து
உன்னை வழிநடத்துவார்.
வறண்ட சூழலில் உனக்கு
நிறைவளிப்பார்;
உன் எலும்புகளை
வலிமையாக்குவார்;
நீயும் நீர் பாய்ந்த
தோட்டம் போலும்,
ஒருபோதும் வற்றாத
நீரூற்று போலும் இருப்பாய்
ஏசாயா:58:11

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தேவமாதா பிறந்த நாள் கொண்டாட்டமாக இன்று செப்டம்பர் 8_ம் நாள் உலகம் முழுவதும் கெண்டாடப்படும் வரிசையில். கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல வளகாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் திருத்தல அதிபர் அருட் தந்தை உபால்ட்,பங்குப் பேரவை துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டாலின், துணைச் செயலாளர் ஸ்டார் வின், பொருளாளர் ரூபன்,துணைச் செயலாளர் டெனிஸ்டோ மற்றும் திரளாக பங்கு மக்கள் கலந்து மாதாவின் பிறந்த நாள் விழாவில் இனிப்பான கேக்கை
உண்டு மகிழ்ந்தார்கள்.