• Tue. Dec 10th, 2024

விஜய் வசந்த் நாடாளுமன்ற நிதியில் சிறுவர் பூங்காவிற்கு ரூ.41 லட்சம் நிதி உதவி..,

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசு சார்பில் சிறுவர் பூங்கா அமைக்க ரூபாய் 41 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமிபூஜை விழா இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார் முன்னதாக அவருக்கு பேரூராட்சி மற்றும் அப்பகுதி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவி அனிதா அன்ட்ரோஸ், துணைத் தலைவவர் ஆண்ட்றோ அலெக்ஸ், வட்டார தலைவர் காலபெருமாள், மருங்கூர் பேரூராட்சி காங்கிரஸ் தலைவி ஹெலன்சிறில், கன்னியாகுமரி இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் அருண் மற்றும் வார்டு தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.