காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தியின் 79 வது பிறந்தநாள் கொண்டாட்டம் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ் குமார்.ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கி சிறப்பித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்


அமலாக்கத்துறையின் வேலை என்பது அன்னிய செலவாணி மோசடி மற்றும் பொருளாதார குற்றம் இதைத்தான் அவர்கள் விசாரிக்க வேண்டும் ஆனால் அமலாக்கத்துயை பாஜகவின் ஏவல் துறையாக மாற்றி பாஜாவிற்கு எதிராக செயல்படும் காட்சிகள் ஆட்சியில் உள்ள இடங்களில் அமலாக்கத்துறையை கொண்டு மிரட்டி அடிபணிய வைக்க முயல்கிறார்கள் இது தமிழகத்தில் ஒரு போதும் நடக்காது தமிழகத்தில் பாஜக தலைகுப்புற நின்றாலும் இங்கு எதுவும் செய்யப்போவது இல்லை.
விஜய் புதிதாக கட்சியை துவங்கி உள்ளார் இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை இதேபோலத்தான் விஜயகாந்த் எம்ஜிஆர் போன்றோரும் கட்சியை துவக்கினர் ஆனால் எம்ஜிஆர் பெருந்தலைவர்களை கட்டமைத்து கட்சி நடத்தியதால் அரசியலில் பிரகாசித்ததார் மற்றவர்கள் நிலை என்ன?
பீகாரில் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சிதான் தற்போதும் ஆட்சியை பிடித்துள்ளது ஆகையால் இது படுதோல்வி என சொல்ல முடியாது தேர்தல் நேரத்தில் பாஜக அரசு ஒரு கோடியை 20 லட்சம் பேருக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கி தேர்தலை சந்தித்து உள்ளது இது மத்திய அரசின் சூழ்ச்சி தேர்தல் ஆணையம் அவர்களுக்கு கூட்டணியாக செயல்பட்டு அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் இந்த வெற்றி அதிக நாட்கள் போகாது மக்கள் ரொம்ப விழிப்புணர்வாக பார்த்த கொண்டு உள்ளார்கள் நிச்சயமாக வரக்கூடிய காலங்களில் இதற்க்கான பதிலை மக்களே தருவார்கள்.
திருப்பரங்குன்றம் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் கருத்து சொல்ல விரும்பவில்லை
நீதிபதி ஒருதலைப்பட்சமாக செயல்படுவது சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலானது என்பதற்கு பாராளுமன்ற கூட்டத்தொடரில் நீதிபதி நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டுவரபட உள்ளது அது வரும்போது பார்ப்போம் என தெரிவித்தார்.
அன்னை சோனியா காந்தியின் 79_வது அகவை தினம் கொண்டாட்டத்தில். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள், ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றார்கள்.




