• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அன்னை இந்திரா காந்தி 41 நினைவு நாள்..,

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி நால் ரோட்டில் சோமனூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி 41 நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த
அன்னை இந்திரா காந்தி அவர்கள் திருஉருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்

பின்னர் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து அன்னை இந்திரா காந்தியின் நினைவு நாளை ஒட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி. எம். சி. மனோகர் தலைமையில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கராஜன் முன்னிலையில்
நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்டத் துணைத் தலைவர் ஆர் பி முருகேஷ், மாநகராட்சி உறுப்பினர் நவீன் குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ், நகரத் தலைவர் பாலசுப்பிரமணியம், வட்டார தலைவர் ரங்கசாமி மற்றும் வட்டார தலைவர்கள் பேரூராட்சி தலைவர்கள், கிராம கமிட்டி தலைவர்கள், கலந்து கொண்டார்கள்.