சமூக வலைத்தளமான டிவிட்டரில் நடிகர், நடிகைகள் பற்றி அதிகமாக டிவிட் செய்யப்பட்டுள்ள பட்டியல் ஆண்டுதோறும் சர்வே நடத்தி வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி இவ்வருடம் டிவிட்டரில் தென்னிந்திய நடிகர்கள் பற்றி அதிகம் டிவிட் செய்யப்பட்டுள்ள பட்டியலில் முதல் இடத்தில் விஜய், 2வதாக பவன் கல்யாண், 3வதாக மகேஷ் பாபு, 4வதாக சூர்யா, 5வதாக ஜூனியர் என்டிஆர், 6வதாக அல்லு அர்ஜூன், 7வதாக ரஜினிகாந்த், 8வதாக ராம் சரண், 9வதாக தனுஷ், 10வதாக அஜித் குமார் இடம்பெற்றுள்ளனர்.
நடிகைகளில் முதல் இடத்தில் கீர்த்தி சுரேஷ், 2வதாக பூஜா ஹெக்டே, 3வதாக சமந்தா, 4வதாக காஜல் அகர்வால், 5வதாக மாளவிகா மோகனன், 6வதாக ரகுல் பிரீத் சிங், 7வதாக சாய் பல்லவி, 8வதாக தமன்னா, 9வதாக அனுஷ்கா, 10வதாக அனுபமா பரமேஸ்வரன் இடம்பெற்றுள்ளனர்.