• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கோவையில் குரூப் 2 தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு

BySeenu

Sep 14, 2024

கோவையில் நடைபெற்று வரும் குரூப் 2 தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு இன்று நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி, சார்பில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ-வில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப கடந்த ஜூன் 20ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மொத்தம் 2,327 பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வை எழுத தமிழகம் முழுவதும் 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 2,763 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 113 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. கோவையில் மட்டும் குரூப் 2 தேர்வை 33,490 பேர் எழுதுகின்றனர்.
தேர்வு மையங்களில் வருவாய்த் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மணிக்கூண்டு பகுதி தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு அதிகாலை முதலே தேர்வர்கள் ஆர்வத்துடன் வந்தனர். தீவிர சோதனைக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.