• Fri. Jan 17th, 2025

வாய்ப்பு கிடைத்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி கோவையில் தெரிவித்துள்ளார்.

BySeenu

Mar 3, 2024

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. பல்சமய நல்லுறவு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இதில், இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி முன்னிலை வகித்தார். பொதுக்குழு கூட்டத்தில் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, மேட்டுப்பாளையம் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் தற்போது சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு மற்றும் புதுவை உட்பட 40 பாராளுமன்ற தொகுதியிலும் திமுக தலைமையிலான கூட்டணி பிரச்சாரம் செய்து வெற்றிக்கு உறுதியாக இருப்பது, திமுக அரசு பதவி ஏற்று 3 வருடங்களில் 1300 மேற்பட்ட கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தி சுமார் 6179 ஏக்கர் நிலங்களை ரூபாய் 5.580 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்ட திராவிட மாடல் அரசுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வது, அண்மையில் அறிவித்த நிதிநிலை அறிக்கையில் கோவையில் 20 லட்சம் சதுர அடியில் டைட்டில் பார்க் மற்றும் கலைஞர் நூலகம் அமைக்க சட்டமன்றத்தில் அறிவித்த தமிழக அரசுக்கும் முதல்வர் அவர்களுக்கும் நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்வது, விவசாய பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வமான உத்திரவாதம் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்துதல் விவசாய கடன் தள்ளுபடி உலக வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண் துறை நீக்குதல் போன்ற கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று பொது குழு கேட்டுக் கொள்கிறது.


போதைப் பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைக்க வேண்டும். பல் சமய நல்லுறவு இயக்கத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவில் ஏழை எளியவருக்கு உதவிகள் நலத்திட்டங்கள் மருத்துவ முகாம்கள் மாநிலம் முழுவதும் நல்லிணக் கூட்டங்கள் கோடைகாலத்தில் நீர் மோர்பந்தல் அமைத்து பொது மக்களுக்கு உதவுதல் ரத்ததானம் மருத்துவ முகாம்கள் மருத்துவ உதவிகள் கல்வி உதவிகள் போதைப் பொருள்களுக்கு எதிராக குறும்படங்களை தயாரித்து மக்கள் இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முகம்மது ரபி, வாய்ப்பு கிடைத்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்தார்.. நிகழ்ச்சியில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், இணை பொது செயலாளர் சுப்ரமணியம், துணை தலைவர் எஸ்.ஏ.பஷீர்,இணை ஒருங்கிணைப்பாளர் அபுதாகீர் மற்றும் வழக்கறிஞர் இஸ்மாயில், கோட்டை செல்லப்பா, ஹஜ்ரத் அப்துல் ரகுமான், ராதாகிருஷ்ணன், திருக்குறள் அன்வர் பாட்சா உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.