நாகர்கோவிலில் உள்ள பாஜகவின் மாவட்ட தலைமை அலுவலகத்தின் முன். மோடி 3_வது முறையாக தொடர்ந்து பிரதமர் பதவி ஏற்றது காபினேட் மற்றும் துணை அமைச்சர்கள் பதவி ஏற்ற நிகழ்வை கொண்டாடும் வகையில், குமரி மாவட்டம் பாஜக தலைவர் தர்மராஜ் தலைமையில், மாவட்ட பாஜகவின் பொருளாளரும், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினருமான முத்துராமன் மற்றும் பாஜகவின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பாஜக அலுவலகம் கொடிக்கம்பத்தில் பாஜக கொடி ஏற்றி பட்டாசு உடன் வானவேடிக்கை விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், பாஜகவின் அலுவலகம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த மக்களுக்கு லட்டு கொடுத்துக் கொண்டாடியதுடன், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்வில் மாநகராட்சி பாஜக உறுப்பினர்களான மீனாதேவ், ஐயப்பன் உட்பட ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர்.
