மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் திடீர் ஆய்வு செய்த சோழவந்தான் MLA கருப்பையா குப்பைகளை சுத்தம் செய்ய வேணாமா அதற்கு தானே சம்பளம் வாங்குறீங்க நியாயமாக நடந்து கொள்ள மாட்டீர்களா என அதிகாரிகளிடம் கேள்வி
இது என்ன பிளிச்சிங் பவுடரா வாடையே வரலையே என கேட்ட MLA கருப்பையா

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சோழவந்தான்
தவெக MLA அங்குள்ள உழவர்சந்தையை ஆய்வு செய்தார் பின்னர் பேரூராட்சி பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,
அப்போது அங்கு தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சொல்லியும் யாரும் அகற்றவில்லை இதனால் அதிகாரிகளை பார்த்து அரசு சம்பளம் தருது ஆனா வேலை பாக்க மாட்டேங்கறீங்க சம்பளம் வாங்குறதுக்கு மனசாட்சி படி வேலை பார்க்க வேணாமா நியாயமா வேலை பாருங்க பா என்னப்பா

எனவும் பேரூராட்சி வளாகத்தில் தரையில் போடப்பட்டிருந்த பிளிச்சிங் பவுடரை கையில் எடுத்து நுகர்ந்து பார்த்த MLA கருப்பையா இது ப்ளீச்சிங் பவுடரா வாடையே வரவில்லை என பாலமேடு செயல் அலுவலரை பார்த்து கேட்டார், அதற்கு பெண் அதிகாரியோ இது ப்ளீச்சிங் பவுடர் தாங்கனு பதில் சொன்னார்,
ப்ளீச்சிங் பவுடர் னா வாடை வர வேண்டும் இதில் வாடையே வரலையே என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். பாலமேடு மட்டுமின்றி சோழவந்தான் எம் எல் ஏ கருப்பையா ஆய்வு செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலப்பொடி மாவு போன்ற வகைகளையே பயன்படுத்துகின்றனர் ப்ளீச்சிங் பவுடருக்கான செலவுத் தொகையை எழுதிவிட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இது குறித்தும் எம்எல்ஏ ஆய்வு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



