அரியலூர் .தமிழ்நாடு முதல மைச்சர் மு.க .ஸ்டாலின் உத்தரவுப்படி,அரியலூர் மாவட்டம், முத்துவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருச்சி மண்டலம் சார்பில் 02 புதிய BS-VI நகரப்பேருந்துகள் , சுத்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் 01 புதியBSVI,நகரப்பேருந்து மற்றும் ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் 06 புதிய BS-VI நகரப்பேருந்துகள் என 09 புதிய BS-VI நகரப் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ,மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி முன்னிலை யில்,கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட்,கும்பகோணம் நிர்வாக இயக்குநர் .தசரதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் பொது மேலாளர் டி.சதீஸ் குமார்,மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன் , ஒன்றிய திமுக செயலாளர்கள் தனவேல், அண்ணாதுரை, ஆர் கலிய பெருமாள் ரெங்க முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புச் செல்வன், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









