



கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் அடையாளமாக பல்வேறு நிகழ்வுகள் வரிசையில் எதிர் வரும் (நவம்பர்_15)ம் நாள், கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடைபெறும் இரு சக்கர வாகனம் (பைக்) பயணத்தை, கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் இருந்து தொடங்கும் இருசக்கர வாகனத்தை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் பைக்கை சிறிது தூரம் ஓட்டி தொடங்கி வைக்க உள்ளார் என்ற தகவலை. நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு திமுக மாவட்ட செயலாளருமான மகேஷ் கன்னியாகுமரியில் நிகழ்வு நடக்கும் இடத்தை நேரில் பார்வையிட்ட போது தெரிவித்தார்.

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கும் சேலத்தில் (நவம்பர்_17)ம் தேதி நடக்கவிருக்கும், இளைஞரணி மாநில மாநாடு குறித்த விழிப்புணர்வை தமிழகம் எங்கும் ஏற்படுத்தும் வகையிலும், இந்த இரு சக்கர வாகன பயணம் அமைய இருப்பதுடன்.ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்ற பழமொழியின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் வகையில். கன்னியாகுமரியில்(நவம்பர்_15)ம் நாள் தொடங்கும் இளைஞர் அணியினரது இரு சக்கர வாகன பயணம் அமைய உள்ளது என குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான வழக்கறிஞர் மகேஷ் தெரிவித்தார். அப்போது குமரி மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அகஸ்தீசுவரம் ஒன்றிய செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மற்றும் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்களும் உடன் இருந்தனர்.



