• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பா : தீர்ப்பின் முழு பின்னணி..!

Byவிஷா

Dec 19, 2023

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடிக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால், அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
1996 – 2001 இந்த ஆண்டு காலத்தில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அந்த காலகட்டத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்ற அடிப்படையில் அடுத்து வந்து அதிமுக ஆட்சி காலத்தில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. அதை வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி அதன் மூலமாக பொன்முடி விடுவிக்கப்பட்டார் அப்படிங்கிறது தான் குற்றச்சாட்டு…. இதைச் சொன்னவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ். பொன்முடி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை நான் வாசித்த பிறகு, இரவு முழுவதும் நான் தூங்கவில்லை அப்படின்னு தன்னுடைய வேதனை எல்லாம் பதிவு செய்திருந்தார்.
அதையெல்லாம் பார்த்து இருந்தோம். திட்டமிட்டு இது மாதிரியான விடுவிப்புகள் எல்லாம் நடக்கின்றது அப்படிங்கறது தான் அவருடைய விமர்சனமாக இருந்தது. அதற்கு வேலூர் மாவட்ட நீதிபதி வசந்தலீலா தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு இந்த வழக்கை மாற்றினார்கள். அந்த அடிப்படையில் நான் 40 நாட்கள் விசாரித்து இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறேன். அதனால் 28 ஆண்டுகால என்னுடைய பணி நேர்மையை நீதிபதி ஆனந்த வெங்கடேசன் சந்தேகப்பட்டு விட்டார் என்பது அவருடைய விமர்சனமாக இருந்தது.
அது குறித்து அவருடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதற்கு பிறகு நீதிபதி ஆனந்த வெங்கடேசன், மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டு…. நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் விசாரணையை எடுத்துக் கொண்டார். அவர் பொறுப்பாக இந்த வழக்கை எடுத்துக் கொண்டார். அந்த அடிப்படையில் தான் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி விடுவிக்கப்பட்டது செல்லாது என முந்தைய தீர்ப்பை இரத்து செய்துள்ளார்கள். தண்டனை விவரங்கள் வரக்கூடிய 21ஆம் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவாக இதை பார்க்க வேண்டும். அமைச்சர்கள் பொன்முடி விடுவிக்கப்பட்டது, தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டது,  வளர்மதி வழக்கை எதிர்கொள்ளாமல் இருப்பது இந்த மாதிரி தொடர்ந்து விமர்சனங்களை நீதிபதி ஆனந்த வெங்கடேசன் வெச்சதை நாம்  பார்த்தோம்.
எந்த அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை நடக்கிறது? நீதிபதிகள் எந்த அடிப்படையில்….  எந்த சாட்சியங்கள்,  ஆவணங்கள் அடிப்படையில் இதை விசாரித்து இந்த மாதிரி உத்தரவை பிறப்பிக்கிறார்கள்? என்ற சந்தேகத்தை நீதிபதி ஆனந்த வெங்கடேசன் எழுப்பியது மட்டுமல்லாமல், இந்த வழக்கையெல்லாம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் விசாரிக்கணும் என்பது அவரது முகத்திரமாக இருந்தது. ஆனால் அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டு,  தற்போது ஜெயச்சந்திரன் அந்த பொறுப்பை எடுத்து உத்தரவை பிறப்பித்து இருக்கிறார். அரசியல் ரீதியாக பொன்முடிக்கு மிக முக்கியமான பின்னடைவாக பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சொத்துக்கு வழக்கில் தண்டனை பெற்றால்,  அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத ஒரு சூழல் நடக்கும். 2 ஆண்டுகள் அவருக்கு தண்டணை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது உறுதி செய்யப்பட்டால் அவரது அமைச்சர் பதவி பறிபோகும் நிலை உருவாகும்.  எந்த அளவுக்கு அமைச்சர் பொன்முடிக்கு உச்ச நீதிமன்றத்தில் இவற்கான நிவாரணமாக கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.