• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

செய்தியாளர் சந்திப்பில் அயர்ந்து தூங்கிய அமைச்சர் மூர்த்தி… VIRAL VIDEO..

Byகுமார்

Jul 26, 2022

மதுரை பத்திரிகையாளர் சந்திப்பில் மா. சுப்பிரமணியன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தபோது, அவரது அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் மூர்த்தி அயர்ந்து தூங்கிய விடியோ ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி, இன்னுயிர் காப்போம் திட்டத்தில் தமிழக அளவில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதலிடத்தில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் சுப்ரமணியன் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், மதுரை எய்ம்ஸ் கட்டட வடிமைப்பிற்கான ஒப்பந்தம் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வரைபடம் தயாரித்து எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் துவங்கிவிடும் என தெரிவித்தார்.

மதுரையில் இன்று அமைச்சர்களின் பரபரப்பான செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் அருகில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் உள்ளிட்டோர் அமர்ந்து இருந்தனர்.

பேட்டியின் போது அமைச்சர் மூர்த்தி அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது செய்தியாளர் சந்திப்பில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அமைச்சர் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த அவரது உதவியாளர் அவரை எழுப்பும் வகையில், சாமர்த்தியமாக செல்லிடப்பேசியை அவரிடம் கொடுத்து தூக்கத்தை கலைத்தார்.இந்த சம்பவம் முழுக்க விடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.