• Mon. Dec 1st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் மனோதங்கராஜ் களரி பயிற்சி..,

தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் இயல்பாகவே களரி மற்றும் அது சார்ந்த பல்வேறு தற்காப்பு கலைகள், மற்றும் சிலம்பம் என பல்வேறு திறன் விளையாட்டுகளில் முறையான பயிற்சி பெற்றவர். கல்லூரி மாணவனாக இருந்த காலையிலே, கல்வியோடு தற்காப்பு கலைகளை முழுமையாக பயிற்சி பெற்றதுடன். இத்தகைய கலையை பயிற்றுவித்தும் வந்தவர், அமைச்சரான பின்பும் இத்தகைய பயிற்சியில் தினமும் ஈடுபட்டு வருபவர்.

ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறும். அவரது தொகுதியில் பல்வேறு பணிகளுக்காக ஊர் வரும் அமைச்சர் காலை வீட்டின் மொட்டை மாடியில் அமைச்சர் பயிற்சி எடுப்பதுடன். அந்த பகுதியில் உள்ள பள்ளி செல்லும் மாணவ,மாணவிகளுக்கு அமைச்சரும் பயிற்சி கொடுத்து வருகிறார்.

அமைச்சரால் பல்லாண்டுகளுக்கு முன் அவரது சொந்த ஊரான கருங்கல் பகுதியில் நடத்திவரும் ‘குட்விஷன்’ அறக்கட்டளை சார்பில் தொன்மையான களரி கலையை கற்பித்தல் பணியை அமைச்சர்,அலுவல் நிறைந்த போதும். தனது நெடுங்காலமாக தொடரும் நிலை, இன்றும் தொடர்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் அவரது குட்விஷன் நடத்தும் களரி பயிற்சியை
அமைச்சர் மனோதங்கராஜ் சிறுவர், சிறுமியர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.