கன்னியாகுமரியில் இன்று”வேர்களைத் தேடி” பண்பாட்டு சுற்றுலா திட்டத்தின் கீழ் அயலகத் தமிழ் மாணவர்கள் வருகை நிகழ்ச்சியில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோயில் மாநகராட்சி மேயருமான மகேஷ், குமரி ஆட்சியர் அழகு மீனா, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிகாரிகள்.குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்.அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாபு இணைந்து அயலக தமிழகத்தை சேர்ந்த 100_தமிழ் மாணவ, மாணவியர்களை வரவேற்றார்கள்.


அமைச்சர் மனோ தங்கராஜ் அயலக மாணவர்களிடம் குமரியின் தொன்மை, தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள் பற்றி உரையாடினார்.










