பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட பெரியவெண்மணியில் ரூ.56 கோடி மதிப்பில் 7 ஏக்கர் பரப்பளவில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கட்டடம் மற்றும் மாணவர், மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டுவதற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு பூமி கட்டுமான பணியினை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஏ.வ வேலு நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்ட சபை தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார்.
ஏனென்றால் தமிழகத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு என்னென்ன தேவையோ அதை எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியா அளவில் தமிழகம் ,மாவட்டம், தொகுதி என அனைத்து வகையிலும் பொருளாதார வளர்ச்சிக்காகவும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும், தனிநபர் குடும்பம் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் தனிநபர் வருமானம் 1.50 லட்சம் இருந்தது தற்பொழுது 3 லட்சத்து 5 ஆயிரமாக ஆக தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு தான் ஓட்டு போட வேண்டும் என வாக்காளர்கள் முடிவு செய்துவிட்டனர்.
அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்தவர்கள் கலைந்து தற்போது கூடி உள்ளனர் ஆனால் எங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி, நிரந்தர கூட்டணி . எங்களுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி தொடரும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் / செயலர் சுதன் ,
மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







