தென்மேற்கு வங்கக் கடலில் ‘டித்வா புயல்’ உருவானதை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் புயல் மற்றும் மிக கனமழையை எதிர்கொள்வது குறித்தும் மீட்பு பணிகள் குறித்தும் புதுச்சேரி மாநில அமைச்சர் திருமுருகன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் பூஜா மற்றும் துணை ஆட்சியர் பேரிடர் வெங்கடகிருஷ்ணன் மின்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது புயல் மற்றும் கனமழையை எதிர் கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.








