தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமாருக்கு சிறந்த கல்வி நன்கொடையாளர் விருது வழங்கி பாராட்டினார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த பி.டி. செல்வகுமார்.அவர் வாழ்க்கை பயணத்தை புகழ் பெற்ற ஜெமினி நிறுவனத்தின் “ஜெமினி சினிமா”இதழில் செய்தியாளராக பணி யாற்றிய காலையில். திரைப்படம் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இடம் ஏற்பட்ட நட்பால் அவரது உதவியாளராக பயணிக்கத் தொடங்கிய நிலையில், அந்த காலகட்டத்தில். திரைப்படத்தில் விஜய் புதுமுகமாக அறிமுகம் ஆன நிலையில். விஜய்யின் திரைப்பட பணிகளை ஒழுங்கு செய்யும் பணியில் தொடர்ந்தார், பின்னர் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டவர் தொடர்ந்து “புலி” திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார்.
திரைப்பட தயாரிப்பில் சிறமப் பட்ட பலரும் நிதி உதவி கிடைக்க உதவினார். பின்னர் துன்பம் படுவோறுக்கு உதவுவது என்ற மனோநிலையில் பயணித்தவர்.

கொரோன காலத்தில் சென்னையை விட்டு குமரியில் தொடர்ந்து தங்கிய சூழலில். கொரோன காலத்தில் வருவாய் இன்றி தவித்த பலருக்கு சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணை காய்கறி என கொடுத்து உதவ தொடங்கிய பணியின் நீட்சியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலையரங்கம் கட்டுவது, வகுப்பறை கட்டுவது. பொருளாதார தடையால் பணிகள் தொடராத சிறு குருசடிகள், தேவாலயம் இப்படி என இவரது பொதுப்பணியின் பயணத்தில் இதுவரை 5 பள்ளிகளில் கலை அரங்கம் கட்டிக் கொடுத்துள்ளார் (அரசின் திட்டத்திலே ஒரு கலைஅரங்கத்திற்கு நிதி ஒதுக்கீடு ரூ.15லட்சம்) பி.டி.சல்வகுமார் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் இதுவரை 5 கலையரங்கங்ள், 2_பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டி கொடுத்துள்ளார். இவரது பொதுப்பணி குமரி மாவட்டத்தை கடந்து நெல்லை மாவட்டத்திலும் பரவ தொடங்கியது. இவரது உதவியை பெற்றவர்களுக்கு அவர்களது நன்றியை தெரிவித்து சுவர் ஒட்டி வரும் நிலையில். ஒவ்வொரு மாதமும் நடக்கப் போகும் புது நிகழ்வு, நிறைவேற்ற பட்ட பணிகளுக்கு ” நன்றி” என்ற தொடர் சுவரொட்டிகளை பார்த்து குறிப்பாக கல்வி சாலைகளுக்கு பி.டி.செல்வகுமார் தொடர்ந்து செய்து வரும் உதவிகளால் ஈர்க்கப்பட்ட தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு.
குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்ற “காபி வித் கல்வி அமைச்சர்” என்ற நிகழ்வில் மாணவர்களுடன் தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் பங்கேற்ற நிகழ்வு மாணவர்கள் மத்தியில் மட்டும் அல்ல ஆசிரியர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
சபாநாயகர் அப்பாவு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடம் பி.டி.செல்வகுமாரின் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கொண்டிருக்கும் தனிப்பட்ட கவனத்தை தெரிவித்ததுடன், நடிகர் விஜய்யின் தொடக்க கால திரைப்படங்களின் பங்கேற்பில் உடன் இருந்து பணியாற்றியது பற்றி குறிப்பிட்ட சூழலில், அமைச்சர் அவரது தனிப்பட்ட விருப்பத்தில் நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வி பணியில் சிறந்து விளங்கும் 4 மாவட்ட கல்வியாளர்களுக்கு அமைச்சர் விருது வழங்கிய நிகழ்வில், குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் தென்தாமரைகுளம், லீபுரம், ஆரோக்கியபுரம், ஜேம்ஸ் டவுன், மயிலாடி,வாரியூர மற்றும் நெல்லை மாவட்டத்தில் ஐந்து பள்ளிகளில் கட்டிய கலையரங்கங்ள், வகுப்பறை ஆகிய வற்றை கட்டிக்கொடுத்து மாணவ சமுகத்தின் கல்வி வளர்ச்சியை தொடர்ந்து ஊக்குவித்து வரும் பி.டி.செல்வகுமாரின் பொது நலச் சேவையை பாராட்டி அவருக்கு தென்மாவட்டங்களின் சிறந்த கல்வி நன்கொடையாளர் விருதை பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

அமைச்சர் அவரது பேச்சில். ஒரு தனி மனிதனின் அவரது சினிமாதுறை பணியில் ஈட்டிய செல்வத்தை. நாளைய தலைவர்களான இன்றைய மாணவ,மாணவிகளின் கல்விக்காக செய்யும் மனித நேய பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இனிய நண்பருக்கு கல்வி நன்கொடையாளர் விருது வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.
நிகழ்வில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு அவரது பேச்சில். கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான வகுப்பறைகளை கட்டி கொடுக்கும் பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்ற அமைச்சரின் பேச்சை நான் அப்படியே வழிமொழிகிறேன் என தெரிவித்தார்.
கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செவ்வகுமார் தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சரிடமிருந்து பெற்ற பாராட்டை கொண்டாடும் வகையில், அண்மையில்
மைலாடி ரிங்கல் தெளபே மேல் நிலை பள்ளிக்கு பி.டி.செல்வகுமார் நன்கொடையாக கட்டி கொடுத்த கலையரங்கில் நடை பெற்ற பாராட்டு நிகழ்வில், சாமிதோப்பு அய்யா வழி தலைமை பதியின் பூஜித குரு பாலபிராஜதிபதி அடிகளார் தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளின் சார்பில் பி.டி.செல்வகுமார் பாராட்டப்பட்டார். திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பேர் பங்கேற்றனர்.
