கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு இடையே உள்ள கடல் நீர் பரப்பு பகுதியில் கண்ணாடி இழை பாலம் பணி ரூ.37 கோடி திட்டத்தில் நடைபெற்று வருகிறது கடந்த ஓர் ஆண்டாக. கடலில் பாலம் பணி நடப்பதால் சுற்றுலா பயணிகளை திருவள்ளுவர் சிலை பாறைக்கு அனுமதிக்கவில்லை.

இன்று தமிழக அரசின் பொதுத்துறை மற்றும் சிறுபாலங்கள் துறைமுகம் துறைகளின் அமைச்சர் எ.வ.வேலு,துறை சார் உயர் பொறியாளர்கள், அதிகாரிகள், பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இ.ஆ.ப., முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் , ராஜேஷ் குமார், தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் படகில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பகுதியில் இருதந்து துறை முகப்பகுதி விரிவாக்கம் மற்றும் கண்ணாடி இழை பாலம் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.

அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில்.., இரண்டு பாறைகளுக்கு இடையே உள்ள கடல் பரப்பின் இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணி எதிர் வரும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் பணிகள் முடிந்து சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திறக்கப்படும்.
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்டது. அதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகுகளை சுற்றுலா வாரியத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.