• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோயமுத்தூர் சகோதயா காம்ப்ளக்ஸ் சார்பாக, மினி மாரத்தான் போட்டி

BySeenu

Sep 8, 2024

கோயமுத்தூர் சகோதயா காம்ப்ளக்ஸ் சார்பாக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதற்கு தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே இது குறித்த விழிப்புணர்வை தனியார் அமைப்பினரும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக கோயமுத்தூர் சகோதயா காம்ப்ளக்ஸ் சார்பாக மாரத்தான் போட்டி நேரு ஸ்டேடிய வளாகத்தி்ல் நடைபெற்றது.

(Run Against Drugs) எனும் தலைப்பில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், கோயம்புத்தூர் சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சேர் பெர்சன் நவமணி, தலைவர் சுகுணா தேவி, செயலாளர் நிர்மலா, இணை செயலாளர் சாம்சன், விளையாட்டு ஒருங்கணைப்பாளர் ஞானபண்டிதன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அபிஷேக் ஜாக்சன், அரசு பெரியசாமி, கவிதா, விஜய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல்துறை தெற்கு பகுதி துணை ஆணையர் சரவணக்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர்.