• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மிக்ஜாம் புயல் பாதிப்பு : நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி..!

Byவிஷா

Dec 5, 2023

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு நிலையை சரி செய்ய நடிகர் சூர்யா ரூ.10 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார்.
மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட அதி கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதித்துள்ளது. புயலின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை, விமான சேவை, பேருந்து சேவை போன்றவைகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்பு படையினர் குழு பத்திரமாக மீட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்களை முகாமில் தங்க வைத்து சில சமூக ஆர்வலர்கள் உணவுகளையும் வழங்கி வருகிறார்கள். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை என பலரும் நம்மை பாதுகாக்க யாரேனும் வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பிரபல நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் இணைந்து முதற்கட்டமாக பத்து லட்சம் நிதி உதவி அளித்துள்ளனர். இருவரும் தங்களின் ரசிகர் மன்றங்களின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நடிகர்களான இவர்களை போல் பணமும், நல்ல குணமும் இருப்பவர்கள் தாமாகவே முன்வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அனுப்பி உதவி செய்யும்படி எங்கள் யுPஊ நிறுவனத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். உங்களின் இந்த சிறிய உதவி பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிதும் பயன்படட்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.