• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரியலூரில் அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா.

ByT. Balasubramaniyam

Jan 18, 2026

அரியலூர்.அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 109வது பிறந்த தினத்தை முன்னிட்டு,அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பொறிஞர் பருக்கல் க. புகழேந்தி, மாவட்டச் செயலாளர் வடிவேல் முருகன் ஆகியோர் தலைமையில்,மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர் எஸ் ஆர் கே கோவிந்தராஜ்,மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சேதுராமன்,

மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் ராஜ்குமார் ,மாவட்ட அவைத் தலைவர் ஆப்டிகல்ஸ் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ,மாவட்ட துணை செயலாளர் பழனி வேல் ,மாவட்ட பொரு ளாளர் பொன்முடி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வேலு.சரவணன்,மாவட்ட இளம் பெண்கள் பாசறை செயலாளர் வழக்கறிஞர் சுலோச்சனா ,மாவட்ட மீனவர் அணி செயலாளர் கருணாநிதி, ஒன்றியச் செயலாளர்கள் தங்க கோபி நாதன்,வழக்கறிஞர் செளதரராஜன் கனகசபாபதி,பழனிச்சாமி,இளவழகன்,இராஜேந்திரன்,முனியமுத்து, வெங்கடாசலம் ,நகரச் செயலாளர்கள் முரளி,வழக்கறிஞர் கமலக்கண்ணன், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பலரும், முன்னதாக மங்காயி பிள்ளையார் கோயில் அருகில் உள்ள எம்ஜிஆர் திரு வுருவ சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கிளம்பி நகராட்சி பேருந்து நிலையம் வந்த டைந்து அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலை களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.