புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நேர்மையாக ஆட்சி நடத்தினார் என்பதை ஒத்துக் கொண்டார்.
அண்ணாவும் நேர்மையான ஆட்சி நடத்தினார் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

அதை தவிர்த்து பாஜகவின் மத்திய அரசு கடுமையாக சாடி இருக்கிறார். அவர் கட்சி இரண்டாவது மாநாட்டிற்கு வரும் பொழுது எதையாவது பேசித்தான் ஆகவேண்டும் அந்த முறையில் அவர் பேசி இருக்கிறார்கள் கட்ச தீவு பிரச்சனை பற்றி கூறியிருக்கிறார்.
கச்சத்தீவு பிரச்சனை காங்கிரஸ் காலத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தான் கட்சத் தீவு தமிழகத்திலிருந்து பறிபோனது..
பாரத பிரதமர் நேர்மையான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் இதுவரையில் ஊழல் இல்லாத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உலக அரங்கில் இந்தியாவை மிகவும் உன்னதமான உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் உலக முக்கிய தலைவர்களில் ஒருவராக அவரை எல்லா நாடுகளும் வரவேற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரத்தை ஒன்பதாவது இடத்தில் இருந்து இப்பொழுது நான்காவது இடத்திற்கு ஜப்பானையும் பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறி இருக்கிறது.

அடுத்து மூன்றாவது இடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு நல்லாட்சியை பொருளாதார வளர்ச்சி அடைய நாடாக மாற்றிக் கொண்டிருப்பதை எந்த விதத்தில் அவர் குறை சொல்கிறார் மொத்தத்தில் அவர் அரசியலுக்கு வருவது தேர்தலை சந்திப்பது மக்கள்தான் தீர்ப்பளிப்பார்கள்.