கோவையில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 1995 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்கள் பழைய நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர்.

கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல் பட்டு வருகின்றது.
கோவையின் முக்கிய பகுதியான அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் இந்த பள்ளி நூற்றாண்டுகளை கடந்தும் பல நினைவுகளை கொண்ட பள்ளியாக அறியப்படுகிறது..
இந்நிலையில் இந்த பள்ளியில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1990 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பேர்ல் ஜூபிளி (Pearl Jubilee) ஆண்டாக நடைபெற்ற இதில் கோவை மட்டுமின்றி சென்னை,பெங்களூர் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஸ்டேன்ஸ் பள்ளியில் பயின்ற 90 கிட்ஸ் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைவரும் இணைந்து தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களுடன் இணைந்து குரூப் போட்டோ எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து தாங்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கண்டு தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் கூறுகையில்,
இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் என்பதில் தாம் பெருமிதம் கொள்வதாகவும், தற்போது வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு பணிகளில் இருந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து தங்கள் பழைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக நெகிழ்வுடன் தெரிவித்தனர்.