மழைநீர் வடிகால் அமைக்க அரசால் வழங்கப்பட்ட 1 கோடிக்கும் அதிகமான நிதியை பயன்படுத்த கோரி, உசிலம்பட்டி நகராட்சி கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகாரட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் கூட்டம் நகர் மன்ற தலைவர் சகுந்தலா, துணை தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனும் கலந்து கொண்ட சூழலில் நகராட்சி பகுதிக்கு தேவையான 16 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதில் நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் வசதிகள் ஏற்படுத்த அரசால் வழங்கப்பட்ட நிதியில் சுமார் 1 கோடியே 17 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் கிடப்பில் வைத்துள்ளதாக | கூறப்பட்ட சூழலில், இந்த நிதியை பயன்படுத்த கோரியும், வார்டு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வடிகால் அமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும் நகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை, உங்களது பணிகளை கூட செய்வதில்லை என குற்றம்சாட்டி நகர் மன்ற உறுப்பினர்கள் வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுத்து விரைவில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்த கூட்டம் அமைதியாக நிறைவுற்றது.