• Sun. Dec 28th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சந்திப்பு..,

ByKalamegam Viswanathan

Dec 28, 2025

மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பானது இன்று சுந்தர்ராஜபுரம் டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது இதில் 1995 பத்தாம் வகுப்பு மாணவர்களும் 1997 12 ஆம் வகுப்பு மாணவர்களும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் முன்னாள் ஆசிரியருக்கு கௌரவம் செய்யப்பட்டு முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஆனந்தத்தில் கண்கலங்கி தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் குறிப்பாக மாணவர்கள் பேசுகையில் நாங்கள் அன்று ஆசிரியர்கள் கைகளால் அடி வாங்கியதால் என்று பல உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்று மிகப் பெருமையாக கூறினார்கள்.

இவர்கள் சந்திப்பானது மிகுந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தியதாக கலந்து கொண்ட ஆசிரியர்கள் மகிழ்ச்சியினை தெரிவித்தனர். ஆசிரியர்கள் கூறுகையில் முகம் மறந்து இருந்தாலும் ஒவ்வொரு மாணவர்களும் உயர்ந்த நிலையில் இருக்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துவதாகவும் மேலும் இவர்கள் வளர்ந்து தங்களால் இயன்ற உதவிகளை இல்லாத நபர்களுக்கு செய்ய வேண்டும் எனவும் ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். 30 வருடங்கள் கழித்து ஒருவரை ஒருவர் சந்தித்தது நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.