குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடந்தது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பழமையும் பெருமை வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பின் தினந்தோறும் மாலை 6 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். 19ந்தேதி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. 20ந் தேதி சனிக்கிழமை காலை போடி நாயக்கன்பட்டி பாமாருக்மணி சமேத கோபால கிருஷ்ணன் கோயிலிலிருந்து சீர்வரிசையுடன் உற்சவர் புறப்பாடும் மாலை 6 மணிக்கு தாதம்பட்டி நீரேத்தான் இரட்டை விநாயகர் கோயிலில் இருந்து108 முளைப்பாரி மற்றும் 108 சீர்வரிசை தட்டுடன் ஊர்வல புறப்பாடு நடந்தது. நேற்று 21ந்தேதி ஞாயிற்றுக்கிழமை குரு ஓரையில் காலை11.05மணிக்கு அமுதன் பட்டர் யாகசாலை பூஜை நடத்த
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. சுந்தரேஸ்வரர் ஊதா கலரில் பட்டும் மீனாட்சி அம்மன்பட்டு மேலாடையும், ஆரஞ்சு கலர் கலரில் ப்ளூ கலர் பாடர் பட்டு சேலையும் அணிந்து அருள் பாலித்தனர். மீனாட்சியாக விக்னேஷ் பட்டரும் சுந்தரேஸ் வரராக ஜெயகணேஷ் பட்டரும் இருந்தனர். இந்த திருக்கல்யா ணத்தின் போது திருமணமான பெண்கள் தங்களது கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
22 ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு தலைவர் ஏடு. ராதாகிருஷ் ணன் தலைமையில் திருப்பணி குழுவினர் மற்றும் குலசேகரன்கோட்டை கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.