தி.மு.க தலைமையிலான கூட்டணி வலிமையாக உள்ளது அதில் மதிமுகவும் தொடர்கிறது என துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த திருச்சி மதிமுக எம்.பி. துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்மையை ஆற்றி உள்ளேன். இந்த துணை ஜனாதிபதி தேர்தல் சித்தாந்தங்களுக்கு இடையானது.ஒரு பக்கம் ஜனநாயகம், மதசார்பின்மை,சமூக நீதி அடிப்படையில் எதிர்கட்சிகள் சார்பில் சுதரசன் ரெட்டி களத்தில் இருந்தார்.மத அரசியல் சார்பில் ஒன்றிய அரசு வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் நின்றார்.வெற்றி, தோல்வியை காட்டிலும் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரணியில் தேர்தலை சந்தித்து. ஒரு நம்பிக்கையை அளித்தது. இந்தியா கூட்டணி நம்பிக்கையுடன் உள்ளது. ஜனநாயகத்திற்கும் மதவாதத்திற்கும் இடையான போட்டியாக பார்த்தோம்.
சி.பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக எம்.பி ஒருவர் வாக்களித்து உள்ளார் என்று யார் சொன்னார்களோ அவரிடம் கேளுங்கள். அதுப்பற்றி எங்களுக்கு தெரியாது.
அதிமுக- பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளிய வந்த கட்சி தலைவர்களிடம் தான் கார்ணத்தை கேட்க வேண்டும்.
திமுக தலைமையிலான கூட்டணி 7 ஆண்டுகளை கடந்து 8வது ஆண்டாக தொடர்ந்து வலிமையாக உள்ளது. கூட்டணி, கூட்டணி தலைமை மீது மதிமுக நம்பிக்கை கொண்டு உள்ளது. எந்த நோக்கத்திற்காக கூட்டணி சேர்ந்ததோமோ அந்த நோக்கம் தொடர்கிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக தொடர்கிறது.
விஜய் சினிமாவில் பெரிய நட்சத்திரம். தேர்தல் களத்திலும் தமிழ்நாட்டின் உச்ச இடத்தை அடைய செயல் ஆற்ற வேண்டும். அரசியல் 100 மீட்டர், 200 நீட்டர் ஓட்டப்பந்தயம் கிடையாது. மாரத்தான் போல் தொடர்ந்து போராடுவது. அடுத்த வரக்கூடிய காலங்களில் விஜய்யின் செயல்பாடுகளை பார்த்து தான் கருத்து சொல்ல முடியும். சினிமா நட்சத்திரன் என்பதால் கூட்டம் சேருகிறது. இதை வைத்து எதுவும் சொல்ல முடியாது.
விஜய் கூட்டம் நடத்திய போது போலீஸ் அனுமதி வ்ழங்கி உள்ளது. கூட்டம் அதிகமானதால் பொது மக்களுக்கு இடையீறு வந்து விடக்கூடாது சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதால் சில இடங்களை தவிர்க்க சொல்லி உள்ளனர். திருச்சியில் சரியான காரணத்தை சொல்லி தான் மறுத்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.