புதுக்கோட்டை மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றதுகூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்கே கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார் மாநில அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் சிற்றரசு மதியழகன் முத்தையா சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மோகன் ஞானபிரகாசம் பாண்டியன் வைர மூர்த்தி பிரபாகரன் சுரேஷ் நமச்சிவாயம் வீரபத்திரன் முருகானந்தம் கலையரசன், சண்முகநாதன் புகழேந்தி கண்ணையா ஆகிய ஒன்றிய செயலாளர்கள்நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கூட்ட முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜா ஆதிமூலம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட மதிமுக செயலாளர் கலியமூர்த்தி இந்த இயக்கத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இந்த இயக்கத்தின் தொண்டர்கள் தேனீக்கள் போல உழைத்து வருகின்றனர்.
ஒவ்வொரு மதிமுக தொண்டனும் ஆயிரம் போர் வீரனுக்கு சமமானவர்கள்
திருச்சி மதிமுக மாநில மாநாடு வெற்றி பெறுவதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு படைக்கும்.அதற்காக கழகப் பொதுச் செயலாளரும் முதன்மைச் செயலாளரும் கண் துஞ்சாது பசி பார்க்காது அரசியல் களத்தில் களத்தில் பம்பரமாய் சுழன்று வருகின்றனர்.
இயக்கத்தை எள்ளி நகையாடியவர்கள் ஏளனமாய் பார்த்தவர்கள் புருவங்களில் ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் திருச்சி மாநாடு மாற்றத்தை உண்டாக்கும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள் 2 நகரங்களிலிருந்து 160 வாகனங்களில் இருந்து 3000 பேர் செயல் மறவர்களாய் மாநாட்டில் பங்கேற்பார்கள்.
தீரர்கள் கோட்டையம் திருச்சியை திணறடிப்பார்கள்.திருச்சி மாநாடு அரசியல் வரலாற்றில் வெற்றி சரித்திர நிகழ்வை உண்டாக்கும் இவ்வாறுமாவட்ட மதிமுக செயலாளர் எஸ் கே கலியமூர்த்தி பேசினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பல்வேறு இயக்கங்களில் இருந்து முகமது ஜமீல் ராஜீவ் காந்தி ஜாபர் சாதிக் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் மதிமுகவில் இணைந்தனர்.நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட அவைத்தலைவராக விக்டரி தாமஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். அவருக்கு மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து சால்வைகள் அணிவித்தனர். தொடர்ந்து திருச்சி மாநாடு லோகவை மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி வெளியிட்டார். நிர்வாகிகள் அதனை தங்கள் கார் மற்றும் வாகனங்களில் ஒட்டி கொண்டனர்.