• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கூட்டத்திலிருந்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய மதிமுக உறுப்பினர்…

கன்னியாகுமரி நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் மதிமுக மாமன்ற கவுன்சிலரை திமுக, காங்கிரஸ் மாமன்ற கவுன்சிலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினார்கள். மாமன்ற கூட்டம் தொடங்கிய சில வினாடிகளில் ஏற்பட்ட பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் மாமன்ற கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஐந்தாவது வார்டு ம‌.தி.மு க மாமன்ற கவுன்சிலர் உதயகுமார் தன்னுடைய வார்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கிருந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களால் மதிமுக கவுன்சிலர் உதயகுமாரை குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

மதிமுக உறுப்பினர் மன்ற அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரது வார்டில்.2016_ம் ஆண்டில் புதைக்கப்பட்ட கழிவு நீர் குழாய் தரமானது அல்ல. அதனை மாற்றி ஐஎஸ்ஐ குழாய்கள் மதிக்கவேண்டும் என்று தரையில் அமர்ந்து நடத்திய போராட்டத்தால் கூட்டணி கட்சிகளான திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர்களால் கூட்ட அரங்கில் இருந்து வேளியேற்றப்பட்டார்.

திமுகாவை சேர்ந்த நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் மகேஷ்- யிடம் திமுக கூட்டணியை சேர்ந்த மதிமுக கவுன்சிலர் உதயகுமார் செயல் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது,

நம் கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். பூடம் தெரியாமல் சாமி ஆடுவது பற்றி அந்த நிலைதான் தர்ணா நடத்தியவயரின் நிலையும்.

நாகர்கோவில் நகராட்சியாக இருந்த காலத்தில் அன்றைய பாஜக சேர்மன். பாதாள சாக்கடை திட்டம் என ஒரு திட்டத்தை கொண்டு வந்த காலத்தில் அவரது வார்டில் 2016 – ம் ஆண்டு புதைக்கப்பட்ட சாக்கடை குழாயில் ஊழல் என சொல்லி, இன்றைக்கு போராட்டம் நடத்துவதில் எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது. கூட்டணி தயவில் 11_வாக்குகளில் வெற்றி பெற்றவர். மாநாகராட்சி சபையில் எவராக இருந்தாலும்.ஆதாரத்துடன் புகார்களை கூறினால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என செய்தியாளர்களிடம் மோயர் மகேஷ் தெரிவித்தார்.