• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாலியல் வன்கொடுமைகள் குறித்து பொதுவிசாரணை கோரி கோட்டை நோக்கி மாதர் சங்கம் நடைப்பயணம்

ByIlaMurugesan

Dec 24, 2021

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதி வழங்க வேண்டும். பொது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி திண்டுக்கல்லில் இருந்து கோட்டை நோக்கி நடைப்;பயணம் சென்று முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கே.பாலபாரதி தெரிவித்துள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு.


பாச்சலூர் சிறுமி பாலியல் படுகொலை செய்யப்பட்டதையடுத்து கடந்த 10 நாட்களாக குற்றவாளிகளை கைது செய்யாத நிலை உள்ளது. இந்நிலையில் மாதர் சங்கம் வலியுறுத்தியதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சி;.பி.சிஐடிக்கு மாறுதல் செய்துள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளியன்று முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி தலைமையில் மாதர் சங்கம் விடியல் பெண்கள் கூட்டமைப்பு சார்பாக மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் கலந்து கொண்ட கே.பாலபாரதி கூறும் போது..,


திண்டுக்கல் மாவட்;டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுமிகள் மீதூன பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக சுமார் 500 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 20 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது.

187 வழக்குகளில் குற்றவாளிகள் தப்பி உள்ளனர். பல வழக்குகள் இன்னும் கிடப்பிலே உள்ளது. எனவே தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களைக் காட்டிலும் அதிக அளவில் பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். எனவே குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் தமிழக அரசு திண்டுக்கல்லில் பணியில் இருக்கும் நீதிபதிகளைக் கொண்டு பகிரங்கமாக பொது விசாரணை நடத்த முன்வரவேண்டும்.

திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி மாதம் இறுதியில் திண்டுக்கல்லில் இருந்து கோட்டை நோக்கி மாபெரும் நடைபயணம் மேற்கொண்டு முதல்வரை சந்தித்து மனுக்கொடுத்து பொதுவிசாரணை நடத்த வலியுறுத்தப்படும் என்று கே.பாலபாரதி தெரிவித்தார். இந்நிகழ்;ச்சியில் விடியல் பெண்கள் கூட்டமைப்பின் மாவட்டத்தலைவர் டாக்டர் அமலாதேவி, பேராசிரியை வெண்ணிலா, அருட்தந்தை பிலிப் சுதாகர், மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ராணி, ஜானகி, வனஜா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.