• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByK Kaliraj

Dec 8, 2025

நேர்மையின் அடையாளமாகவும் முதல்வராக இருக்கும் போதே பதவியை தூக்கி எறிந்தவரும் ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம், ஒன்பது ஆண்டுகள் முதல்வர் என்று உண்மையின் உறைவிடமாக வாழ்ந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய பெயரையும் ,அவரை களங்கப்படுத்தும் விதமாக அவரை வசை பாடி கொண்டிருக்கின்றவர்களையும், நாடார் சமுதாயத்தை கேவலமாக பேசி இருக்கின்ற my india youtube சேனல் நடத்திக் கொண்டிருக்கின்ற முகமது முக்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.

காமராஜரை அவதூறாக பேசியும் உழைத்து ஊர்விட்டு ஊர் சென்று பிழைக்க போராடுகின்ற நாடார் சமுதாயத்தையும் அவதூறாக பேசினால் பிரபல்யமாகி விடலாம் என்பது எல்லாருடைய ஒரு தவறான வழிமுறையாக இருந்து கொண்டிருக்கின்றது. இதை கண்டித்து பெருந்தலைவர் பிறந்த புண்ணிய பூமியாம் விருதுநகர் தெப்பம் தெற்கு பஜாரில் நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலை முன்பு நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் கண்ணன் அவர்களும் , மாவட்ட செயலாளர் ஜெயராஜ் அவர்களும்,மாவட்ட தலைவர் மாரிக்கனி அவர்கள் தலைமை தாங்கவும் பொருளாளர் சுரேஷ்குமார் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவு ஒளி ஆண்டவர் மற்றும் நிர்வாகிகள் ,நாடார் மகாஜன சங்க செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் 9.12.25 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது.