• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னை பள்ளிக்கரணையில் திமுகவை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

ByE.Sathyamurthy

May 7, 2025

சென்னை பள்ளிக்கரணையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக ஆளுங்கட்சி திமுகவை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை பள்ளிக்கரணையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக, ஆளும் கட்சி திமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ கேபி கந்தன் தலைமையில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் முன்னிலையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து விலைவாசி உயர்ந்து விட்டது, வீட்டு வரி, மின்சாரம் விட்டதால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இந்த ஆட்சி வேண்டாம் என்று கோஷத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதிச் செயலாளர்கள் குமார், பரணி பிரசாத் மற்றும் இயேசு பாதம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமாறன், முன்னாள் நன்பர்கள், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி, சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகள் சூரியகலா, பிரகாஷ், தனசேகர், ரஞ்சித் குமார், பி. எம். ராம்தாஸ் மாமன்ற உறுப்பினர் லட்சுமி, வட்டச் செயலாளர்கள் தியாகராஜன், டெல்லி பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை மிக சிறப்பாக நடத்தினார்கள்.