அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் நள்ளிரவில் வெனிசுலா அதிபர்
மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து
நாகர்கோவில் பூங்கா அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெனிசுலா அதிபர் போதை பொருள் கடத்தல் வழக்கில் நள்ளிரவில் திடீரென
கைது நடவடிக்கையால் வெனிசுலா முழுவதும் பெரும் பதட்டமும் நிச்சயமற்ற தன்மையையும் நிலவி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்
நாகர்கோவில் வேப்பமூடு பூங்க அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் அருணாசலம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெஜிஸ்குமார் நிறைவுரையாற்றினர்.
இதில் மோகன், அசீஸ், பரமசிவன், நாதன், ஜீவானந்தம் மற்றும் மூத்த தோழர்கள் கலந்து கொண்டு அமெரிக்கா அதிபருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.




