மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள தியாகி விஸ்வநாததாஸ் 139வது பிறந்தநாளையொட்டி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருமங்கலத்தில் வாழ்ந்து வந்த சுதந்திரப்போராட்ட தியாகி விஸ்வநாததாஸ்.இவர் நாடக நடிகராக இருந்துகொண்டு 1919முதல் தனது மேடைப்பாடல் மூழமாக வெள்ளையர்களுக்கெதிரான பாடல்களைப்பாடி மக்கள் விழிப்புணர்வு பெரும்அளவுக்கு பாடல்மூலமாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார்.அதற்காக அவர் 29முறை ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது பிறந்தநாள் அரசின் விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தியாகி விஸவநாததாஸின் 139 வது பிறந்தநாளையொட்டி திருமங்கலத்தில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் திருவுருவச்சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் திருமங்கலம் நகர செயலாளர் ஜே டி விஜயன் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் ஒன்றிய செயலாளர் அன்பழகன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சதீஷ் சண்முகம் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதற்கிடையே தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம் சிதலமடைந்து உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் மருத்துவ சமுதாயத்தினர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மனு கொடுத்தனர். மேலும் சிதலமடைந்த கட்டிடத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பார்வையிட்டார். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க மேற்கொள்வதாக தெரிவித்தார்.