பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) 10.09.2025 அன்று கல்லூரி வளாகத்தில் அங்காடித் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் சீனிவாசன் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளின் உணவு வகைகள் மற்றும் இந்திய மாநிலங்களின் பாரம்பரிய உணவுத் தயாரிப்புகள், பண்பாடு, நாகரிகம், கலை மற்றும் பழக்கவழக்கங்கள் மாணவிகளின் படைப்பாற்றலுடன் ஒருங்கிணைந்து காட்சிப்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவ உணவுடன், அந்த மாநில மக்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பிரிதிபலிக்கும் விதமாக மாணவிகள் உடை அணிந்து வந்திருந்தனர்.

மேலும் துறை வாரியாகச் சென்று விற்பனைப் பொருள்களைப் பார்வையிட்டு மாணவிகளின் கைவண்ணத்தில் தயார் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்களைச் சுவைத்தும் அவர்களது திறமைகளைப் பாராட்டியும் ஊக்கத்தொகையினை வழங்கி உற்சாகப்படுத்தினார்.
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு மாணவிகளை ஊக்கப்படுத்தி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
கல்லூரியின் பிரதிநிதிகளாகத் தலைவர் ஃபஜிலா பானு, துணைத்தலைவர் பவதாரண்யா, செயலாளர் ஐஸ்வர்யா, பொருளாளர் ஆர்.பைரவி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி போன்றோர் அங்காடித் திருவிழாவைச் செம்மையுற நடத்துவதற்கு உதவினர்.

கல்லூரியில் ஒவ்வொரு துறையும் மாணவிகள் தலைவர்களாகப் பொறுப்பேற்று உலக நாடுகள் மட்டும் அல்லாது இந்திய மாநிலங்களின் உணவு பதார்த்தங்களைச் சிறப்பான முறையில் செய்து காட்சிபடுத்தப்பட்டன.
இவ்விற்பனை விழாவில் மாணவிகள் அதிநவீன அங்காடிகளில் குறும்படம் அதிரவைக்கும் விளையாட்டுகளையும் நடத்தினர். அங்காடிகளில் ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகள் அழகூட்டும் அலங்கார பொருட்கள் அழகு நிலையம் ஆடைகள் பரிசுப்பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மகிழ்வித்தனர்.

இதன் மூலம் படிக்கும் போதே மாணவிகள் தொழில் மற்றும் நிர்வாகத் திறமைகளை வளர்க்கும் விதமாக இவ்அங்காடித் திருவிழா அமைந்திருந்தது.
இவ்விழாவில் முதல்வர், புல முதன்மையர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 3500 க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.