தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமியை பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார்.

இந்த நிலையில் இன்று அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ மாவடி ராமசுவாமி திருவீதி விழாவை முன்னிட்டு புஷ்ப பல்லாக்கு வாகன திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்திலிருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிபுகுந்தது.
கரூர் மாரியம்மன் புஷ்ப பல்லாக்கு திருவீதி உலாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.