• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மார்ச் 4ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்ட சாமியின் அவதார தினத்தை முன்னிட்டு, மார்ச் 4ஆம் தேதியன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
அய்யா வைகுண்டசாமியின் 193வது அவதார விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுத் தேர்வு இருந்தால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விடுமுறை பொருந்தாது என்று தெரிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 
அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினம் வருகிற 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவர் வழியை பின்பற்றும் மக்கள், அவரை சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக கருதி வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக, தென் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள் அவரை வழிபட்டு வருகின்றனர். வைகுண்டரின் பிறந்த தினத்தன்று, அவரை வழிபடும் மக்கள், அந்தந்த பகுதிகளில் ஊர்வலம் செல்வது வழக்கம். அவரின் அவதார தினத்தைக் கொண்டாடும் வகையிலும், பக்தர்களின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும் தென் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.