• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

2023-24ஆம் ஆண்டுக்கான நம்பிக்கைக்குரிய பல படங்கள்…, இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன்…

Byஜெ.துரை

Jul 29, 2023

நினைவில் நிற்கும் மறக்க முடியாத கதைகளை உருவாக்குதல் மற்றும் ஈர்க்கும் வகையிலான கதை சொல்லல் ஆகியவை ஒரு சிறந்த இயக்குநருக்கான முக்கிய திறமைகள். அந்த வகையில் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன், பார்வையாளர்கள், தயாரிப்பாளர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ஓடிடி தளங்களிலும் மக்களை மகிழ்விக்கும் வகையிலான கதைகளைக் கொடுத்து வருகிறார்.

தனது அறிமுகப் படமான ‘மரகத நாணய’த்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில், சரவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘வீரன்’ திரைப்படமும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம், திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு ஓடிடியிலும் பார்வையாளர்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறது. ஒரு நல்ல படத்தின் முக்கிய அம்சம், தமிழ் தெரியாத பார்வையாளர் களையும் கவருவது. ‘வீரன்’ அதை செய்து வருகிறது.

அடுத்தடுத்த வெற்றிகரமான திரைப்படங்கள் மூலம், இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் 2023-24 காலகட்டத்தில் அவரை பிஸியாக வைத்திருக்கும் படங்களைப் பெற்றுள்ளார்.

இது குறித்து இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் கூறும்போது, ​​“இயக்குநராக எனது பயணத்தை மிகுந்த அன்புடனும் வெற்றியுடனும் வளர்த்த ஒட்டுமொத்த திரையுலக நண்பர்களுக்கும், பத்திரிக்கை-ஊடக நண்பர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்போது வரிசையாக பல படங்களில் பிஸியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முன்னணி நடிகர்களான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி உட்பட அதே நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து இயக்க இருக்கிறேன். இது முடிந்தவுடன் விஷ்ணு விஷால் மற்றும் சத்யஜோதி ஃபிலிம்ஸுடன் இணைந்து ஒரு ஃபேண்டஸி படம் இயக்குகிறேன்” என்றார்.

ஏ.ஆர்.கே.சரவன் திரைப்படப் பிரியர்களுக்கு கற்பனையுடன் கூடிய அழகிய பொழுது போக்குப் படங்களை அவர் தருவதால் உலகளாவிய பார்வையாளர்களையும் அவரால் ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையை பல பான் இந்திய தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளார்.