சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே கொரட்டி சிந்தாமணி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது.

சிவகங்கை,ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 350 ற்கும் மேற்பட்ட மாடுகள் போட்டிக்காக கொண்டுவரப்பட்டது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம் இறங்கிய நிலையில்,மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றதில் 18க்கும் மேற்பட்டோர் சிறு,சிறு காயம் அடைந்தனர்.