• Wed. Jun 7th, 2023

மகரவிளக்கு தரிசனம் நிறைவு… வரும் 20ஆம் தேதி சபரிமலை நடை அடைப்பு

Byகாயத்ரி

Jan 19, 2022

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளையுடன் மகரவிளக்கு கால தரிசனம் நிறைவடைகிறது. இதையடுத்து 20ம் தேதி காலை கோயில் நடை சாத்தப்படும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகர ஜோதியை தரிசித்தனர். மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று இரவு வரை திருவாபரண அலங்காரத்துடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.இன்று வரை பக்தர்கள் நெய்யபிஷேம் செய்து ெகாள்ளலாம். நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

நாளை மறுநாள் (20ம் தேதி) காலை 6.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி மாதம் கோயில் நடை திறக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *