• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

“படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதி” – முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்த நாளான இன்று,தமிழுக்குத் தொண்டு செய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும் என்று ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவ மகாகவி பாரதியின் 140 வது பிறந்த நாளான இன்று தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.


அந்த வகையில்,பாரதியாரின் 140 வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் பாரதியார் பிறந்தநாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:


“நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா,திறம்பாட வந்த மறவன்,அறம்பாட வந்த அறிஞன், படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்த நாள் இன்று.தமிழுக்குத் தொண்டுசெய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்”,என்று தெரிவித்துள்ளார்.