மதுரை மாவட்டம் தாதம்பட்டி நீரேத்தான் வாடிப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு இரட்டை விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று மாலை 4மணிக்கு மங்கள வாத்தியத்துடன் தொடங்கி 5 15 மணிக்கு திருமுறை பாராயணம் 6:00 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி புன்யா வசனம் மற்றும் மண்டப பூஜை யாகபூஜை பூர்ணாஹுதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை 6:00 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் யாக வேள்வி தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, விநாயகர்பூஜை, புண்ணியாஜனம், யாக பூஜை மகா பூர்ணாஹுதி நடைபெற்று தீபாராதணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து,10 மணிக்கு இரட்டை விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ,
பரம்பரை அறங்காவலர் கந்தசாமி, பாலகிருஷ்ணன், செல்வம் வாரிசுதாரர்கள், வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன் மற்றும் வினோத் தாதம்பட்டி நீரேத்தான் டி. வாடிப்பட்டி கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொது
மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
