• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மன்னாடிமங்கலம் சித்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்..!

Byவிஷா

Oct 19, 2023

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ் விழாவை முன்னிட்டு, கணபதி பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்நிகழ்வில் யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்று பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று, நான்கு கால யாக பூஜைகள் மஹா பூர்த்தியுடன் நிறைவுற்றது. காலை 9 மணி அளவில் கடம் புறப்பாடாகி, சுமார் பத்து மணி அளவில் கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கிய பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.